தமிழ்நாடு

tamil nadu

புவனேஸ்வர் - ஹவுரா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 1:06 PM IST

Train fire Accident: புவனேஸ்வரில் இருந்து ஹவுரா ஜன் சதாப்தி சென்ற விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த விபத்தில் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Fire breaks out in Bhubaneswar Howrah Jan Shatabdi Express
புவனேஸ்வர் - ஹவுரா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

கட்டாக்: புவனேஸ்வரில் இருந்து ஹவுரா ஜன் சதாப்தி சென்ற விரைவு ரயில் இன்று (டிச.7) காலை கட்டாக் ரயில் நிலையம் வந்ததுள்ளது. அப்போது ரயிலில் இருந்த சில பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் தீப்பிடிப்பதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், ரயிலில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர். மேலும் ரயில் பெட்டியின் அடியில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரயிலில் ஏற்பட்ட விபத்து சரிசெய்யப்பட்ட நிலையில், சுமார் 45 நிமிடத்திற்குப் பிறகு கட்டாக் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா நோக்கி ரயில் கிளம்பியது. மேலும் இந்த தீ விபத்தானது இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், தீ பிடித்த முதற்கட்டத்திலேயே சரிசெய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல, கடந்த ஜூன் மாதம் பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்தில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விசாரணையில் போது, பி5 பெட்டியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அப்போது புகை ரயில் பெட்டிக்குள் சென்றதால், பயணி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

தற்போது இந்தியாவில் ரயில் விபத்து தொடர்பான செய்திகள் அதிகளவில் வெளியாகிறது. கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து ஏற்பட்டு, தற்போது வரை அந்த சம்பவம் மக்கள் மனதில் நீங்காமல் உள்ள நிலையில், இதுபோல அடிக்கடி ரயில் விபத்து நிகழ்வதாக தகவல் வெளியாகிறது. சில நேரத்தில் ரயில் தடம் புரண்டதாகவும், சில சமயங்களில் தீ விபத்து ஏற்படுவதாகவும் போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால், ரயில் பயணத்தின் போது மக்கள் ஒருவித அச்சத்திலேயே பயணம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?

ABOUT THE AUTHOR

...view details