தமிழ்நாடு

tamil nadu

மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து - 6 பேர் பரிதாப பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 5:47 PM IST

மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த கோர சம்பவம் புனேவில் அரங்கேறி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

புனே :மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்சுவாட் அடுத்த தலவேட் பகுதியில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பார்க்கிளிங் வகை மெழுகுவர்த்திகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதியம் 2.45 மணி அளவில் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவரத நிலையில், மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :நாடாளுமன்றம் டிச.11 வரை ஒத்திவைப்பு - மஹுவா பதவி நீக்கத்தை தொடர்ந்து அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details