தமிழ்நாடு

tamil nadu

பேருந்து மீது மோதிய கேஸ் டேங்கர் லாரி

By

Published : Oct 28, 2022, 10:34 AM IST

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது கேஸ் டேங்கர் லாரி மோதியதில் லாரி மற்றும் பேருந்துகள் சேதம் அடைந்தன.

Etv Bharatபேருந்து மீது மோதிய   கேஸ் டேங்கர் லாரி  வெடித்து சிதறி தீ விபத்து
Etv Bharatபேருந்து மீது மோதிய கேஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறி தீ விபத்து

ஜார்கண்ட்: ஹன்ஸ்திஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்கா-பகல்பூர் பிரதான சாலையில் உள்ள பதைத் கிராமத்திற்கு அருகே நேற்று(அக்-27) பேருந்து மீது எரிவாயு டேங்கர் மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கேஸ் டேங்கர் வெடித்து சிதறியதால் மேலும் இரண்டு பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த டேங்கர் லாரியை ஓட்டிய ஓட்டுநர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் லாரி மோதுவதற்கு முன் குதித்து விட்டாரா அல்லது தீயில் சிக்கி உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க:என்ஐஏவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: டிஜிபி சைலேந்திர பாபு

ABOUT THE AUTHOR

...view details