தமிழ்நாடு

tamil nadu

’ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : May 2, 2021, 6:40 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமரவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Nirmala Sitharaman congratulates MK Stalin
Nirmala Sitharaman congratulates MK Stalin

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 60 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 96 இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. அதிமுக கூட்டணி 19 இடங்களில் வெற்றியும், 59 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஸ்டாலினை சந்திக்க விரையும் அரசு அலுவலர்கள் - இல்லத்தின் முன்பு போலீஸ் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details