தமிழ்நாடு

tamil nadu

ஆப்கனிலிருந்து 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு

By

Published : Aug 24, 2021, 12:14 PM IST

ஆப்கானிஸ்தானிலிருந்து 25 இந்தியர்கள் உள்பட 78 பேருடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

Air India flight
Air India flight

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அங்குள்ள வெளிநாட்டவரை மீட்கும் பணியில் சர்வதேச நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. ஆப்கனில் சிக்கித்தவிக்கும் மக்கள் அங்குள்ள காபூல் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை உதவியுடன் மீட்கப்பட்டுவருகின்றனர்.

இந்திய அரசு இதுவரை தூதரக அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. இந்த மீட்புத் திட்டத்தின் தொடர்ச்சியாக இன்று காலை 78 பயணிகளுடன்கூடிய ஏர் இந்தியா விமானம் ஆப்கனிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்தடைந்தது.

இந்த 78 பேரில் 25 இந்தியர்களும் அடக்கம். இந்தியாவின் இந்த மீட்பு நடவடிக்கையில் அமெரிக்காவும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. மீதமுள்ள நபர்களையும் மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத் துறை முழு மூச்சில் ஈடுபடுவதாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பகசி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அடையாளத்தை மறைத்த வளையல் வியாபாரி மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details