தமிழ்நாடு

tamil nadu

பீகார் வந்த 11 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா உறுதி!

By

Published : Dec 26, 2022, 8:37 PM IST

தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பீகார் வந்த 11 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் முறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா
கரோனா

பாட்னா(பீகார்): அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் கட்டுக்கடங்காத அளவில் கரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், போதிய மருத்துவ வசதிகளின்றி மக்கள் செத்து மடிந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது வெளியில் மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாட்டு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிறுத்தி உள்ளது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பொது வெளியில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேரை ரேண்டம் முறையில் தேர்வு செய்து பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தாய்லாந்து, மியான்மர், உள்ளிட்ட நாடுகளில் இருந்து பீகார் வந்த 4 பெண்கள் உள்பட 11 பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்கள் திபெத்திய மதகுரு தலாய்லாமாவின் போதனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பியதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Bodh Mahotsav: கரோனா பரவலுக்கு மத்தியில் பீகாருக்கு படையெடுக்கும் 50 நாடுகளை சேர்ந்த 60,000 பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details