தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் - மத்திய அரசு

By

Published : Dec 13, 2022, 6:03 PM IST

தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்
தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்

டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று (டிசம்பர் 13) மாநிலங்களவையில் மின்சார வாகனங்களுக்கான திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய கனரக தொழிற்துறை இணையமைச்சர் கிருஷன் பால் குஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற எஃப்ஏஎம்இ (FAME) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த எஃப்ஏஎம்இ திட்டத்தின் 2ஆம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1,576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுச்சேரியில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 317 சார்ஜிங் நிலையங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களும் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 520 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மாநிலங்கள் எண்ணிக்கை
மகாராஷ்டிரா 317
ஆந்திரப் பிரதேசம் 266
தமிழ்நாடு 281
குஜராத் 278
உத்தரப்பிரதேசம் 207
ராஜஸ்தான் 205
கர்நாடகா 172
மத்திய பிரதேசம் 235
மேற்கு வங்கம் 141
தெலங்கானா 138
கேரளா 211
டெல்லி 72
சண்டிகர் 70
ஹரியானா 50
மேகாலயா 40
பீகார் 37
சிக்கிம் 29
ஜம்மு & காஷ்மீர் 25
சத்தீஸ்கர் 25
அஸ்ஸாம் 20
ஒடிசா 18
உத்தரகாண்ட் 10
புதுச்சேரி 10
அந்தமான் மற்றும் நிக்கோபார் (போர்ட் பிளேர்) 10
இமாச்சல பிரதேசம் 10
மொத்தம் 2877

இதையும் படிங்க:இந்திய ராணுவம் - சீனா இடையே மோதல்; எந்த வீரரின் உயிருக்கும் பாதிப்பில்லை - ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details