தமிழ்நாடு

tamil nadu

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்

By

Published : Dec 17, 2020, 4:55 PM IST

ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

EC starts preparations for assembly polls due mid 2021
EC starts preparations for assembly polls due mid 2021

டெல்லி:மேற்கு வங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு தற்போதே அரசியல் கட்சிகள் பரப்புரைகள், கூட்டணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் பார்வையிடவுள்ளதாகவு தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் மட்டும் ஆட்சி அமைத்துவரும் நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்புடன் இயங்கிவருகின்றன.

இதையும் படிங்க: ஊடகங்களின் தவறான பரப்புரைக்கு மக்கள் பதிலளித்துள்ளனர்- பினராயி விஜயன்

ABOUT THE AUTHOR

...view details