தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் பிப்.1 வரை 144 தடை உத்தரவு - ஆட்சியர் அறிவிப்பு

By

Published : Jan 28, 2023, 6:46 PM IST

புதுச்சேரி ஜி-20 மாநாடு முன்னிட்டு 144 தடை உத்தரவு பிப் 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் வல்லவன்

புதுச்சேரிமாவட்ட ஆட்சியர் வல்லவன், ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (ஜன.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜி-20 அமைப்பின் மாநாடு கூட்டம் புதுச்சேரியில் 30 மற்றும் 31ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

ஜி-20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கலந்துகொண்டு உரையாட உள்ளனர். புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும், உணவு விடுதிகள், பார்கள் மூடப்படாது.

விமான நிலையம், மற்றும் ராடிசன், அக்காடு, ரெசிடென்சி ஆகிய 3 தங்கும் விடுதிகள், 100அடி சாலையில் உள்ள கருத்தரங்கு நடக்கும் சுகன்யா அரங்கம் ஆகிய 5 பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இது பிப்.1ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மற்ற பகுதிகளில் எந்த தடையும் இல்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கில் தனித்து களமிறங்கும் அதிமுக - கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details