தமிழ்நாடு

tamil nadu

டைனோசர் முட்டையை வழிபடும் மத்தியப் பிரதேச கிராமத்தினர்.. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 9:49 AM IST

Worshiping Dinosaur Eggs: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டைனோசர் முட்டையை, அப்பகுதி மக்கள் தங்களது குலதெய்வமாக வழிபடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

லக்னோ:மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அரிய டைனோசர் முட்டைகள் கடந்த ஆண்டுகளில் புதைபடிம வடிவில் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேலியோ சயின்சஸ் (பிஎஸ்ஐபி) இயக்குநர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், பட்லியா கிராமத்தில் டைனோசர் முட்டைகள் வழிபடப்படுவது குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த டைனோசரின் முட்டை குறித்து இக்குழு நடத்திய ஆய்வில், ​​பட்லியா கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களும் இந்த டைனோசரின் படிம முட்டையை "ககர் பைரவ்" என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக குலதெய்வமாக வணங்கி வருவதை கண்டறிந்துள்ளனர். ககர் என்றால், நிலம் அல்லது பண்ணை எனவும், பைரவ் என்றால் கடவுள் என்றும் அர்த்தம். இதனை வழிபடுவதன் மூலம் கால்நடை பிரச்னைகளிலிருந்தும், துரதிஷ்டங்களில் இருந்தும் மீள்வோம் என அப்பகுதியினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

டைனோசர் முட்டையை வழிபடும் கிராமத்தினர்:பிஎஸ்ஐபியின் மூத்த விஞ்ஞானியும், வரலாற்றுக்கு முந்தைய மையத்தின் பாரம்பரியம் மற்றும் புவிச் சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஷில்பா பாண்டே, பிசிபி இயக்குநர் பேராசிரியர் எம்ஜி தக்கர் தலைமையிலான குழுவினர், மத்திய அரசின் அனுமதியோடு இங்கு டைனோசர் படிமங்கள் மற்றும் அவை தொடர்பான விஷயங்களை பூங்காவாக பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புவிசார் பாரம்பரிய தளங்களில் புதைபடிவங்களை பாதுகாக்கும் பணி: இதுகுறித்து வெஸ்டா மாண்ட்லோய் கூறுகையில், 'டைனோசர் முட்டை எனப்படும் கல் போன்ற இந்த உருவத்தை பாட்லியா மட்டுமின்றி தஹார் ஹி ஜபா, அகாரா, ஜம்யாபுரா மற்றும் தகாரி கிராமங்களிலும் வழிபடுகின்றனர்' என்றார்.

இது தொடர்பாக டாக்டர் ஷில்பா பாண்டே கூறுகையில், 'வெஸ்டா மாண்ட்லோய் கூறியபடி, தங்களது குழு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டதில் கல் போன்ற டைனோசர் முட்டை என்ற புதைபடிவ பொருளை இம்மக்கள் குலதெய்வமாக வழிபடுவது தெரிய வந்துள்ளது. இவை டைட்டானோ-ஸ்டார்க் எனப்படும் டைனோசர் இனத்தின் படிம முட்டைகளாகும். இதைத் தொடர்ந்து, டினோ புதைபடிவ தேசிய பூங்காவில் வைத்து அனைத்து புதைபடிவங்களையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான சாலை வரைபடத்தை நிறுவனத்தின் இயக்குனர் எம்ஜி தக்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரித்துள்ளனர்.

டைனோசர் முட்டையை பராமரிக்க 'குளோபல் ஜியோ பூங்கா': மேலும், அப்பகுதியில் உள்ள புதைபடிவங்களைப் பாதுகாப்பது குறித்து உள்ளூர் மக்களுக்கு தெரிவிப்பதோடு, யுனெஸ்கோவால் மாவட்டத்தை 'குளோபல் ஜியோ பூங்கா'-வாக அங்கீகரிக்க எங்கள் குழு திட்டமிட்டுள்ளது. புவிசார் பாரம்பரியத் தளங்களில் உள்ள அனைத்து புதைபடிவங்களையும் பாதுகாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

டைனோசர்களின் 20 முட்டைகள் கண்டுபிடிப்பு: டாக்டர் ஷில்பா பாண்டே கூறுகையில், “தார் மாவட்டத்தில் 120 கிலோமீட்டர் பரப்பளவில் ஏற்கனவே சுமார் 256 டைனோசர் முட்டைகள் இடப்பட்டுள்ளன. ஜூன் 2023-இல், இன்னும் 20 புதிய டைனோசர் முட்டைக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இங்குள்ள கிராம மக்கள், இந்த டைனோசர் முட்டையில் தங்களது கடவுள்களின் முகம் என ஒரு வடிவத்தை வரைந்து, தங்கள் குல தெய்வமாக காகத் பைரவராக வழிபட்டனர்.

இம்முட்டையை தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் வயல்களின் ஒரு மேட்டில் வைத்து கர்ப்பிணி, கால்நடைகளை அதன் மேல் நடக்கச் செய்து, சடங்கு செய்து வழிபாடு செய்கின்றனர். இதன் மூலம் கர்ப்பிணி விலங்கு மற்றும் அதன் கருவில் இருக்கும் குழந்தை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிய வருகிறது' என்று அவர் விவரித்தார்.

இதையும் படிங்க:காணாமல் போகும் வெள்ளைத்தங்கம்..ஜவுளித்தொழிலை ஆக்கிரமிக்கும் பாலியஸ்டர்..ஜவுளித்தொழிலை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details