தமிழ்நாடு

tamil nadu

பீகார் மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு!!

By

Published : Mar 2, 2023, 10:56 PM IST

பீகார் சட்டப்பேரையில் எதிர்கட்சியினர் புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மறுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவர் விஜய் சின்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள், பீகார் மாநில மக்களை பற்றி பீகார் அரசு கவலைப்படுவதில்லை என கூறினர்.

இதனையடுத்து எதிர்கட்சியினர் சட்டபேரவையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளில் எவ்வாறு கலந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியான வீடியோக்கள் போலியானது. அந்த வீடியோக்கள் உள்ளூர் மக்களுக்கும் வட இந்திய இந்தி பேசும் மக்களுக்கும் நடந்த மோதல். அந்த வீடியோவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களோடு சம்பந்தப்படுத்தி பேசுவது தவறானது” என கூறினார்.

இதையும் படிங்க:நடுரோட்டில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த கார்… காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details