தமிழ்நாடு

tamil nadu

உலகில் மிக மோசமாக மாசடைந்த நகரம் "டெல்லி": ஆய்வில் தகவல்

By

Published : Mar 17, 2021, 12:26 PM IST

உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசு கொண்ட நகரமாக டெல்லி உள்ளதாக ஸ்விஸ் நிறுவன ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

Delhi
Delhi

"2020ஆம் ஆண்டில் காற்று மாசு" குறித்த ஆய்வறிக்கையை ஸ்விஸ் நிறுவனம் நடத்தியுள்ளது. அதில் முதல் 50 இடங்களை பிடித்த நகரங்களில் 49 நகரங்கள் வங்கதேசம், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் உள்ளன எனத் தெரியவந்துள்ளது.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டெல்லியில்தான் அதிகளவிலான காற்று மாசு உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் வங்கதேச தலைநகரான டாக்கா உள்ளது.

நாடுகள் அடிப்படையில் வங்கதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதேவேளை, 2019ஆண்டு குறியீடுகளை ஒப்பிடுகையில், இந்திய நகரங்கள் 63% மேம்பட்டுள்ளன எனவும் நேர்மறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காற்றுமாசு ஏற்பட முக்கிய காரணமாக போக்குவரத்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பயோமாஸ், மின் உற்பத்தி, தொழிற்சாலைகளை, கட்டுமானம், குப்பை எரிப்பு மற்றும் வேளாண் கழிவுகள் எரிப்பு ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயிலுக்கு 3000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details