தமிழ்நாடு

tamil nadu

Horoscope 2022: பிப்ரவரி 12 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?

By

Published : Feb 12, 2022, 6:16 AM IST

HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காண்போம்.

பிப்ரவரி 12 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?
பிப்ரவரி 12 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?

மேஷம்

நீங்கள் கற்பனை வளம் மிக்கவர் என்பதால், அனைவரையும் மகிழ்வீர்கள். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. நீங்கள் சாதனையாளர் என்றாலும், நீங்கள் செய்ய முடியும் அளவைவிட, அதிகமான அளவு பணிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு திறமைகள் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன், நேர்மையாக உழைப்பீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.

ரிஷபம்

நீங்கள் இன்று, பணியில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாகக் நேரத்தை கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறந்த வகையில் நேரத்தைக் கழிக்க, அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்க கூடும். இன்று முழுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவை சாப்பிடவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.

மிதுனம்

இன்று, சில காரணங்களால் உங்கள் மனதில் வருத்தமும் பதற்றமும் ஏற்படும். உங்கள் கவலைகளை நீங்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பை பெறுவீர்கள். எங்கள் பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பதற்றமும் எரிச்சலான மனநிலையும் இருக்கக்கூடும். பாதகமான சூழ்நிலைகளில் கூட, நிதானத்தை இழக்காமல் அமைதியாக செயல்படுங்கள். அவ்வாறு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கோப உணர்வு இருந்தால், பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாகும்.

சிம்மம்

இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் கருத்தை கேட்டு அறிவீர்கள். அப்போது நீங்கள், ஒன்றும் பேசாமல் பொறுமையாக அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கன்னி

நீங்கள் இன்று அதிக புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களது திறமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த கலைஞராக திகழ்வீர்கள். உங்களது கற்பனைத் திறன் அதிகம் இருக்கும் காரணத்தினால், உங்கள் செயல்திறன் அதிகம் இருக்கும். ஆடல் மற்றும் பாடல் கலையை தேர்ந்தெடுத்தால் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். நாடக கலை மற்றும் எழுத்துத் துறையில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.

துலாம்

சிறிய விஷயங்கள் அல்லது பிரச்சனைகள் குறித்து சிந்தித்து, மன அழுத்தம் கொள்ள வேண்டாம். மன அமைதியை பெற யோகா அல்லது தியானம் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் சில விஷயங்கள் தொடர்பாக நெருக்குதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. முக்கியமான விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது சாதக மற்றும் பாதகமான நிலைகளை கவனமாக ஆராய்ந்த பிறகு எடுக்க வேண்டும்.

விருச்சிகம்

இன்று, நீங்கள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் மனநிலையில் இருப்பீர்கள். ஏக்கமான மற்றும் வருத்தமான சிந்தனைகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், விரைவில் கைவிட்டு போன எதுவும் திரும்ப வராது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடக்கி வாழ்க்கையில் முன்னேறி செல்வீர்கள்.

தனுசு

இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். நீங்கள் உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் நீங்கள் காதல் வயப்படுவீர்கள். எனினும் இது கவர்ச்சியின் காரணமாக வந்த ஈர்ப்பாக இருக்கலாம். தொடக்க கால உறவை, கவனத்துடன் கையாளாமல் இருந்தால் உறவில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்களது புகழை பாதிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

மகரம்

இன்று பொதுவாக, வேலை அதிகம் இருக்கும். திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் நல்லது. இதன் மூலம் வேலைப்பளு குறையும். பணியை மேற்கொள்ளும் போது, எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டால், பணியில் ஏற்படும் தவறுகளை தவிர்க்கலாம்.

கும்பம்

உலகம் முழுவதிலுமிருந்து, நல்ல விஷயங்கள் ஏதோ ஒன்று உங்களை வந்தடையும். இன்று முழுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் நண்பர்கள் மற்றும் மனதுக்குப் பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனம்

உங்களது பணியை பொறுத்தவரை, கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கவும். படிப்பதற்காக வெளியில் செல்ல விரும்புவர்களுக்கு, அது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, தங்கள் கனவுகளை நோக்கி செல்வார்கள்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details