தமிழ்நாடு

tamil nadu

தற்போதைய கரோனா சூழ்நிலையால் இந்தியாவில் ஊரடங்கு தேவையில்லை!!

By

Published : Dec 24, 2022, 4:02 PM IST

இந்தியாவின் தற்போதைய கரோனா சூழ்நிலையில் சர்வதேச விமானங்களை தடை செய்யவோ அல்லது ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. ஆனால் சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கரோனா சூழ்நிலையால் இந்தியாவில் ஊரடங்கு தேவையில்லை
தற்போதைய கரோனா சூழ்நிலையால் இந்தியாவில் ஊரடங்கு தேவையில்லை

புது டெல்லி: இந்தியாவின் தற்போதைய கோவிட் சூழ்நிலை சர்வதேச விமானங்களை தடை செய்யவோ அல்லது ஊரடங்கு விதிக்கவோ உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால் சில நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், புதிதாக கடுமையான கோவிட் அலை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறினர்.

எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாள்ர்களிடம் பேசுகையில், "ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் திடிரென கோவிட் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச விமானங்களை தடை செய்யவோ அல்லது ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை".

மேலும் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் விமானங்களைத் தடை செய்வது பயனுள்ளதாக இல்லை என்பதை கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. சீனாவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் துணை மாறுபாடு BF.7, ஏற்கனவே நம் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது என்று தரவு தெரிவிக்கிறது என்றார்.

மேலும் வரவிருக்கும் நாட்களில் ஊரடங்கு தேவையா என்று கேட்டதற்கு, டாக்டர் குலேரியா, "தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் இயற்கை தொற்று காரணமாக இந்திய மக்கள் ஏற்கனவே கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதால், கடுமையான கோவிட் தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் சூழ்நிலை உருவாகும் சாத்தியமில்லை".

தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்கள்தொகையில் நல்ல அளவிலான கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கும் தேவை இல்லை என்று டாக்டர் குலேரியா கூறினார்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் ஒரு அத்திப்பட்டி கிராமம் "உதய்புரா"

ABOUT THE AUTHOR

...view details