தமிழ்நாடு

tamil nadu

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: பாதுகாப்புப் படை வீரர்கள் படுகொலை!

By

Published : Mar 25, 2021, 5:31 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் லாவேபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புறநகர்ப் பகுதியான லாவேபோராவில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குநர் விஜய் குமார் கூறுகையில், இத்தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

லாவேபோரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐவர் படுகாயம் அடைந்ததாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details