தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீரில் 948 கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு சிஆர்பிஎப் பயிற்சி!

By

Published : Feb 8, 2023, 9:44 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 948 கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு, சிஆர்பிஎப் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஆர்பிஎப் பயிற்சி
சிஆர்பிஎப் பயிற்சி

புதுடெல்லி:மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4,985 கிராம பாதுகாப்பு குழுக்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வரை 4,153 கிராம பாதுகாப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி, ஒரு கிராம பாதுகாப்புக் குழுவில் 15 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. பதற்றமான பகுதிகளில் செயல்படும் கிராம பாதுகாப்புக்குழுவின் தலைவருக்கு மாத ஊதியமாக ரூ.4,500 வழங்கப்படுகிறது. தன்னார்வ அடிப்படையில் கிராம பாதுகாப்புக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.4,000 வழங்கப்படுகிறது.

உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை வைத்திருப்பவர்கள், ஜம்மு-காஷ்மீர் காவல் துறையால் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளவர்களும் கிராம பாதுகாப்புக் குழுவில் இடம்பெறுவார்கள். மேலும் கிராம மக்கள் தொகை, பாதுகாப்புத் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி, இக்குழு நிறுவப்படும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக 111 பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2021-ல் 95 முறை பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றுள்ளது.

2022-ம் ஆண்டு 187 பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர். 2021-ல் 180 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர்.

பயங்கரவாதிகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் குறைந்துள்ளன. 2022-ம் ஆண்டு 30 பேர், பயங்கரவாதம் தொடர்புடைய சம்பவங்களில் இறந்துள்ளனர். 2021-ல் 41 பேர் பலியாகி உள்ளனர்"என எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் புதிய நீலநிற கோட்: அதில் என்ன ஸ்பெஷல்?

ABOUT THE AUTHOR

...view details