தமிழ்நாடு

tamil nadu

ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்

By

Published : Jun 8, 2022, 4:04 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிதாலி ராஜ்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிதாலி ராஜ்

மகளிர் கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் மிதாலி ராஜ், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 8) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல ஆண்டுகளாக உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!. உங்கள் ஆசிர்வாதத்துடனும் ஆதரவுடனும் எனது 2ஆவது இன்னிங்ஸை எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் மிதாலி ராஜின் பங்கு அளப்பரியது. வரும் ஜூன் 26ஆம் தேதியுடன் தனது 23ஆவது ஆண்டு கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்யும் மிதாலி ராஜ் 1999ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்டில் ஒட்டுமொத்தமாக 699 ரன்களை எடுத்துள்ளார். அதில், அதிகபட்சமாக 214 ரன்கள் அடித்துள்ளார். 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதங்களுடன் 7 ஆயிரத்து 805 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 89 டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 364 ரன்கள் எடுத்துள்ளார்.

முதலிடம்:அதிகப்போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட்டர் என்ற சாதனையை படைத்த மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். உலகளவில் மகளிர் உலகக்கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையையும், அதிகப்போட்டிகளை விளையாடிய வீராங்கனை என்ற பெருமையையும் கேப்டன் மிதாலி ராஜ் பெற்றுள்ளார். அந்த வகையில், 39 வயதான மிதாலி ராஜ் 24 உலகக்கோப்பை ஆட்டங்களில், 14 வெற்றிகள், 8 தோல்விகள், ஒரு டிரா என்று 23 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

மேலும், கடந்த 2003ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:French Open 2022: மீண்டும் சாம்பியனான 'களிமண் கிங்' நடால்!

ABOUT THE AUTHOR

...view details