தமிழ்நாடு

tamil nadu

India corona cases: மூன்றரை லட்சத்தை நெருக்கும் தினசரி பாதிப்பு

By

Published : Jan 21, 2022, 9:49 AM IST

நாட்டில் புதிதாக மூன்று லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 703 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

India corona cases
India corona cases

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூன்று லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 027 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 19 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் ஒன்பதாயிரத்து 692 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவால் 703 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 88 ஆயிரத்து 396 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 60 லட்சத்து 58 ஆயிரத்து 806 ஆக உள்ளது. இதுவரை 160.43 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் நேற்று (ஜன 19) மட்டும் 70 லட்சத்து 49 ஆயிரத்து 779 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:HOROSCOPE: ஜனவரி 21 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?

ABOUT THE AUTHOR

...view details