தமிழ்நாடு

tamil nadu

கரோனா - ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்தனர்

By

Published : Jul 22, 2021, 11:08 AM IST

Updated : Jul 22, 2021, 12:54 PM IST

இந்தியாவில் நேற்று (ஜூலை 21) ஒரே நாளில் 38 ஆயிரத்து 652 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

covid tracker  India covid tracker  statewise covid data  coronavirus in india  corona india count'  india count  கரோனா எண்ணிக்கை  நாட்டின் கரோனா பாதிப்பு  கரோனா பாதிப்பு  இந்தியா கரோனா பாதிப்பு  கரோனா தொற்று பரவல்
கரோனா பாதிப்பு

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 383 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 720 ஆக உள்ளது.

மேலும் 38 ஆயிரத்து 652 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 339ஆக உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 507 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 987ஆக உயர்ந்துள்ளது.

மொத்த தொற்று எண்ணிக்கை

இதுவரை இந்தியாவில் கரோனா தொற்றுக்காக 4 லட்சத்து 9 ஆயிரத்து 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.31% ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.12% ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 31 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.41%, ஆகப் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.09 கோடி ஆகும்.

தடுப்பூசி விவரம்

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், நாட்டில் இதுவரை 41 கோடிட்யே 78 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 40 கோடியே 59 லட்சத்து 77 ஆயிரத்து 410 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 3 கோடியே 20 லட்சத்து ஆயிரத்து 490 கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

இது தொடர்ந்து, ஜூலை 21 வரை மொத்தம் 45 கோடியே 09 லட்சத்து 51 ஆயிரத்து 151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:உருவானது புதிய புயல்

Last Updated : Jul 22, 2021, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details