தமிழ்நாடு

tamil nadu

சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக தங்கள் வாக்குறுதிகளை காப்பி அடித்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 11:08 PM IST

Modi guarantees like 15 lakh per account expired: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக சார்பாக வெளியிட்டுள்ள வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நகல் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

congress-slams-pm-copycat-chhattisgarh-manifesto-says-modi-guarantees-like-rs-15-lakh-per-family-have-expired
பிரதமரின் ரூ.15 லட்சம் வழங்குவதாக தெரிவித்தது காலாவதியாகிவிட்டது என காங்கிரஸ் தெரிவித்துள்ளனர்...

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இந்த மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கி முடிவுகள் அன்றே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தகவல் தொடர்புத்துறை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை இலவசங்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து நகல் எடுத்தது போல் உள்ளது. எடுத்துக்காட்டாக சமையல் எரிவாயு விலை ரூ.500க்கும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3100க்கும் கொள்முதல் செய்யப்படும் எனக் காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன் முறையாக இது போன்ற வாக்குறுதிகளை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி U turn ஆகிவிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் காங்கிரஸ் வாக்குறுதிகள் போன்று உள்ளது. இது பா.ஜ.கவின் தோல்வி பயத்தைக் காட்டுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (நவ.3) வெளியிட்டார். "அதில், சமையல் எரிவாயு ரூ.500க்கும், விவசாயிகளிடமிருந்து நெல் குவிண்டாலுக்கு ரூ.3100க்கும் கொள்முதல் செய்யப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறும் போது, சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குடும்பத்தினர் பயன்படுத்தும் சமையல் எரிவாயு ரூ.500க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு மாநிலத்திலும் சமையல் எரிவாய்வு ரூ.500க்கு ஏன் வழங்க கூடாது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் மத்திய அரசிடம் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்கள் முதலில் நிரப்ப வேண்டும் என்றும் மேலும், பாஜக தேர்தல் வாக்குறுதியில் சத்தீஸ்கர் உரிமைகள் பற்றி பேசவில்லை.

மேலும், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு தனி நபர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் மற்றும் ஆண்டு 2 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றம் 100 ஸ்மார்ட் நகரங்கள் போன்ற பிரதமர் உத்தரவாதங்கள் தற்போது காலாவதி ஆகிவிட்டதாகவும், மக்கள் புத்திசாலிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது வரை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆனால், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சாதிவாரி கணக்கெடுப்பு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.7000 ரூ.10000மாக உயர்த்தப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.500க்கு சமையல் எரிவாயு மற்றும் 700 புதிய கிராமப்புற தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என உத்தரவாதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முகேஷ் அம்பானிக்கு இமெயிலில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!

ABOUT THE AUTHOR

...view details