தமிழ்நாடு

tamil nadu

பெகாசஸ் விவகாரம்- நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் திட்டம்!

By

Published : Jul 20, 2021, 12:14 PM IST

பெகாசஸ் விவகாரத்தில் காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

Pegasus Project
Pegasus Project

டெல்லி : ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதி, முன்னாள் தலைமை தேர்தல் அலுவலர் இஸ்ரேலின் தனியார் நிறுவனத்தின் உளவு மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 300 பேர் இஸ்ரேலின் தனியார் உளவு நிறுவனத்தின் மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலே எதிரொலித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில் இந்த விவகாரத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : இத்தனை ஆபத்தானதா இஸ்ரேலின் பெகாசஸ்!

ABOUT THE AUTHOR

...view details