தமிழ்நாடு

tamil nadu

துப்பாக்கி முனையில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு..  ஐஏஎஸ், முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு..

By

Published : Jan 11, 2023, 10:54 AM IST

பிகாரில் துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த ஐஏஎஸ் அலுவலர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மீது பாட்னா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஐஏஎஸ், முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஐஏஎஸ், முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாட்னா ஐஏஎஸ் அலுவலர் சஞ்சீவ் ஹான்ஸ் மற்றும் முன்னாள் ஜான்ஜர்பூர் எம்எல்ஏ (ராஷ்டிரிய ஜனதா தளம்) குலாப் யாதவ் ஆகிய இருவர் மீதும் பாட்னா காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாட்னா சிவில் நீதிமன்றத்தில் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால், இங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இறுதியாக பிகார் உயர் நீதிமன்றத்தில் அப்பெண் முறையிட்டுள்ளார். இதனை ஏற்ற உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் மீது மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாட்னா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாட்னா சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய ஐஏஎஸ் அலுவலர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் மீது பாட்னா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய முன்னாள் எம்எல்ஏ குலாப் யாதவ், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் டெல்லியில் ஐஏஎஸ் அலுவலர் வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது துப்பாக்கி முனையில் இதனை செய்துள்ளனர்.

இதையும் படிங்க:பேஸ்புக் மூலம் மும்பை பெண்ணை கோவை வரவழைத்து பாலியல் வன்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details