தமிழ்நாடு

tamil nadu

இந்திய வீரர்களின் துணிவும், வீரமும் பாராட்டுக்குரியது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

By

Published : Dec 17, 2022, 12:22 PM IST

கல்வானாக இருந்தாலும் சரி, தவாங்காக இருந்தாலும் சரி இந்திய வீரர்களின் துணிவும், வீரமும் பாராட்டுக்குரியது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

டெல்லி:லடாக்கின் கல்வான் மோதலின் போதும், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மோதலின் போதும் நாட்டின் ராணுவ வெளிப்படுத்திய துணிவும், வீரமும் பாராட்டுக்குரியது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் நோக்கத்தை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே கேள்வி எழுப்பினோம்.

பொதுவாக அரசியல் விமர்சனங்கள் உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பொய்யின் அடிப்படையில் அரசியல் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டதை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

தவாங் அச்சுறுத்தலை மத்திய அரசு புறக்கணிக்கிறது. உண்மைகளை மறைக்க முயல்கிறது. சீனா முழு வீச்சில் போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:’குஜராத்தின் கசாப்புகாரர்’ ; பிரதமர் குறித்து பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சை எதிர்த்து போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details