தமிழ்நாடு

tamil nadu

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்கும் அமெரிக்க அமைச்சர்

By

Published : May 19, 2021, 9:10 PM IST

ஜோ பைடன் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் முதல்முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கன், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர செர்ஜி லாவ்ரோவை இம்மாதம் சந்திக்கவுள்ளார்.

Antony Blinken
Antony Blinken

அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைத்தது. ஜோ பைடனின் அமைச்சரவையில் ஆன்டனி பிலிங்கன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ட்ரம்பின் ஆட்சியைக் காட்டிலும் பைடனின் அரசின் கொள்கை முடிவுகள் மாறுபட்டதாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவின் சண்டை நாடுகளான ரஷ்யா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கை குறித்து பைடன் அரசின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கன், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர செர்ஜி லாவ்ரோவை வரும் இம்மாதம் சந்திக்கவுள்ளார். ஆட்ரிக் கவுன்சில் அமைச்சரைக் கூட்டம் பின்லாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது இருவரும் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரு நாட்டின் பரஸ்பர உறவு, சர்வதேசக் கொள்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்திப்பு திட்டம் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முடிவு!

ABOUT THE AUTHOR

...view details