தமிழ்நாடு

tamil nadu

பாஜகவின் அடுத்தக்குறி மே.வங்கம்? 5 மாதங்களில் ஆட்சி கவிழ்ப்பு என சர்ச்சை கருத்து!

By

Published : Jul 16, 2023, 8:46 PM IST

மேற்கு வங்கத்தில் 5 மாதங்களில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கலாம் என பாஜக எம்.பி. ஷாந்தனு தாகூர் பொது வெளியில் பேசியது பெரும் சர்ச்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Mamta
Mamta

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் விரைவில் ஆட்சி கலைந்து விடும் என்றும் பாஜக எம்.பி ஷந்தனு தாகூர் பொதுக் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் ஷாந்தனு தாகூர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி ஐந்து மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், அண்மையில் முடிவடைந்த பஞ்சாயத்துத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல்வேறு முறைகேடுகளை செய்யாமல் இருந்திருந்தால், பாஜக இன்னும் ஆயிரக்கணக்கான இடங்களைக் கைப்பற்றியிருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், மாநில தேர்தல் ஆணையம் உள்பட அனைத்து அரசு இயந்திரங்களும் நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கையில் ஈடுபட தவறிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் கடைசித் தேர்தலாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் 39 மக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்கத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றும் என்ன நடக்கிறது என்று பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் யாருக்கு தெரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் திரும்பினால் கூடும் என்று தெரிவித்தார்.

அதேநேரம் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி ஏற்பட்டு திடீரென அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட பின்பற்ற மறுக்க கூட செய்யலாம் என்றார். அதேநேரம் அது நடக்கும் என்று தான் சொல்லவில்லை என்றும் நடக்காமலும் போகலாம் என்றார். அரசியலில் எதுவும் சாத்தியம் என்று ஷாந்தனு தாகூர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜூலை 14ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மேற்கு வங்காள பாஜக தலைவர் சுகுந்தா மஜும்தர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தில் உள்ள அப்பாவி மக்களின் வாழ்க்கை பாதுகாக்க மத்திய அரசு எந்த நிலைக்கு வேண்டுமென்றாலும் செல்லும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :Oppositions Bengaluru meet: ஆம் ஆத்மி, திரிணாமுல் பங்கேற்பு.. தொகுதி பங்கீடு சாத்தியமா?

ABOUT THE AUTHOR

...view details