தமிழ்நாடு

tamil nadu

நடிகருக்கு இணையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் பேனர்கள்!

By

Published : Aug 3, 2022, 7:16 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு நகரம் மற்றும் கிராமங்களில் நடிகருக்கு இணையாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நடிகருக்கு இணையாக பேனர்கள்
நடிகருக்கு இணையாக பேனர்கள்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி ரங்கசாமியின் ஆதரவாளர்கள் நகரம் மற்றும் கிராமங்கள் என பல்வேறு இடங்களில் வித்தியாசமான பேனர்களை வைத்துள்ளனர். முதலமைச்சரை நடிகருக்கு இணையாக சித்தரித்து தொண்டர்கள் பேனர்களை வைத்துள்ளனர்.

நடிகருக்கு இணையாக பேனர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்த நாளின் போது அவரது ஆதரவாளர்கள் ரங்கசாமியை புகழ்ந்து விதவிதமான நடிகர்கள் கெட்டப்பில் பேனர்கள் வைத்து கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவரது ஆதரவாளர்கள் முக்கிய சாலைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர், கட்டவுட்கள் வைத்துள்ளார். புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் காற்றில் பறந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு தட்டாஞ்சாவடியில் உள்ள கோயிலில் நாளை பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:'செங்களம்' தான் சரி 'சதுரங்கம்' அல்ல!

ABOUT THE AUTHOR

...view details