தமிழ்நாடு

tamil nadu

சொத்து மதிப்பு ரூ. 30,000 கோடி... யோகா சாம்ராஜ்யத்தின் தலைவன் உருவான கதை...

By

Published : Jun 21, 2022, 10:49 PM IST

ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சைக்கிளில் ஆயுர்வேத மருந்துகளை விற்றுவந்த ராம்தேவ், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மாறிய வியக்கவைக்கும் செய்தித் தொகுப்பே "யோகா சாம்ராஜ்யத்தின் தலைவன் உருவான கதை".

billionaire baba ramdev history
billionaire baba ramdev history

டோராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 1965ஆம் ஆண்டு ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார் ராம்தேவ். 1995-1996ஆம் ஆண்டுகளில் தனது நண்பர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா உடன் சைக்கிளில் ஆயுர்வேத மருந்துகளை விற்று வந்தார். யோகாவில் மிகுந்த ஆர்வம், பயிற்சியும் கொண்ட ராம்தேவ், கன்கால் என்னும் இடத்தில் கிருபாலு பாக் ஆசிரமத்தை நிறுவினார். இங்கு வருவோருக்கு இலவசமாக யோகா பயிற்சி கற்றுக்கொடுத்து வந்தார். இந்த யோகா மையத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டேபோனது.

ஒருகட்டத்தில் யோகா பயிற்சியளிக்க கட்டணம் வசூலிக்க தொடங்கினார். 1997ஆம் ஆண்டில் ராம்தேவ், பாலாகிருஷ்ணா இருவரும் திவ்ய யோகா மந்திர் என்னும் அறக்கட்டளையை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் யோகா முகாம்களையும், ஆயுர்வேத மருந்தகங்களையும் நிறுவினர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் ராம்தேவ் அறியப்பட்டார். இதனால் சன்ஸ்கார், ஆஸ்தா போன்ற தொலைக்காட்சிகளின் மார்னிங் ஷோக்களில் யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சிகளில் தனது யோகா யுக்திகளாலும், பேச்சுத்திறமையாலும் அண்டை மாநிலங்கள் வரை பிரபலமடைந்தார். இவரை பல்லாயிரக்கணக்கானோர் பின்பற்ற தொடங்கினர். இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், அமெரிக்க, ஜப்பான் உள்ளிட்ட நாட்டுமக்களும் இவரது யோகா பயிற்சியினை விரும்பி கற்றுக்கொண்டர். தனக்கான வரவேற்பை நன்கறிந்த ராம்தேவ் ஆச்சார்யா, பால்கிருஷ்ணா உடன் சேர்ந்து 2006ஆம் ஆண்டு பதஞ்சலி யோக்பீத் என்ற நிறுவனத்தை நிறுவி ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கிறார். ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் லாபம் கொட்டுகிறது. இந்த லாபம் ருச்சி சோயா, அட்வான்ஸ் நேவிகேஷன், சோலார் டெக்னாலஜிஸ் பிரைவேட் உள்ளிட்ட நிறுவனங்களை தொடங்க வைக்கிறது.

இன்றை நிலவரப்படி பதஞ்சலி யோக்பீத் நிறுவனத்தின் மதிப்பு ரூ.30,000 கோடியாகும். இதுமட்டுமல்லாமல், சீனாவின் பிரபல நாளிதழில், பாபா ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு (பதஞ்சலி யோக்பீத் டிரஸ்ட், திவ்யா பார்மசி உள்ளடக்கியது) ரூ.43,000 கோடிக்கு மேல் என்றும், இவரது நண்பரும் துணை பங்குதாரருமான ஆச்சார்யா பால்கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணாவின் நிறுவனங்களில் தாயாரிக்கப்படும் பொருள்கள் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன. அந்த வகையில் ஆயுர்வேத மருந்துகள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை விற்பனை செய்யப்படுவருகிறது.

குறிப்பாக, ராம்தேவ்வுக்கு ஹரித்வாரில் ஆடம்பரமான பங்களா, இரண்டு தொழிற்சாலைகள், ஆயுர்வேத மருந்துகள் ஆராய்ச்சி மையம், மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அசையும் சொந்துக்கள் உள்ளன. சொகுசு கார் முதல் ஹெலிகாப்டர் வரை இருக்கின்றன. இவருக்கு மத்திய அரசு பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது. மொத்தத்தில் யோகா என்ற ஒன்றை மூலதனத்தில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத உச்சத்தை பாபா ராம்தேவ் அடைந்துள்ளார். இந்த வாழ்க்கையை கொடுத்த யோகாவை அவர் ஒருநாளும் மறக்கமாட்டார். இன்று (ஜூன் 21) யோகா தினத்தை ஹரித்வாரில் கொண்டாடினார்.

இதையும் படிங்க:இந்திய பிரபலங்களின் யோகாசான புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details