தமிழ்நாடு

tamil nadu

நக்சல்களின் பிடியிலிருந்த கிராமத்தை கல்வியால் மாற்றி வரும் நக்சல் தலைவரின் மருமகள்...!

By

Published : Oct 2, 2022, 7:55 AM IST

பீகாரில் நக்‌சல் தலைவரின் மருமகள் அந்த ஊரிலேயே குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து மாற்றத்தை ஏற்படுத்தி வரும் சம்பவம் நடந்தேறியுள்ளது.

Etv Bharatநக்‌ஷல்களின் பிடியிலிருந்த கிராமத்தை கல்வியால் மாற்றி வரும் நக்‌ஷல் தலைவரின் மருமகள்...!
நக்‌ஷல்களின் பிடியிலிருந்த கிராமத்தை கல்வியால் மாற்றி வரும் நக்‌ஷல் தலைவரின் மருமகள்...!

பீகார்(ஜமுய்): முந்தைய காலகட்டங்களில் நக்சல்களின் கூடாரமாக இருந்த சோர்மரா கிராமம் தற்போது மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. பலேஷ்வர் கோடா போன்ற நக்‌சல் தலைவர்களின் வன்முறைகளைக் கண்டுவந்த இந்த கிராமம் தற்போது கல்வியிலும், பாதுகாப்பிலும் வெகுவாக முன்னேறி வருகிறது.

இந்த மாற்றத்திற்கு கடந்த ஜூன் மாதம் காவல்துறையில் சரணடைந்த நக்சல் தலைவர் கோடாவிற்கும் கூட ஓர் தொடர்பு உண்டு. ஆம், நக்சல் தலைவர் கோடாவின் மருமகளான ரஞ்சு தேவி தற்போது அந்த கிராமத்திலுள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.

இது குறித்து ரஞ்சு தேவி கூறுகையில், “நான் தற்போது குழந்தைகளுக்கு கற்பிக்கிறேன், அது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் எனக்கான மதிப்பீடும் பெறுகியுள்ளது. இளைஞர்கள் படித்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென நான் விரும்புகிறேன்.

அடுத்த தலைமுறை தங்களின் முன்னேற்றத்தை நிறுத்தி விடக் கூடாது. கல்வி மிக முக்கியமானது . வட்டார மொழியிலேயே கற்பிப்பது குழந்தைகளிடையே கற்றலுக்கான ஆர்வத்தைப் பெறுக்க உதவுகிறது” என்றார்.

ரஞ்சு தேவி பணிபுரியும் பள்ளிக்கூடம் 2007ஆம் ஆண்டு அவரது மாமனார் கோடா மற்றும் அவரின் குழுபினரால் தகர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் பிமாபந்த் காடுகளுக்கு அருகில் மட்டும் வெளிபுறத்திலிருந்த கிராமங்களில் நக்சல்களின் அராஜாகங்கள் அதிகமாக இருந்தது.

குறிப்பாக 2005ஆம் ஆண்டு காவல்துறை எஸ்.பி சுரேந்திர பாபுவின் கொலை சம்பவத்தைக் கூறலாம். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கடந்த 2019ஆம் ஆண்டு முக்கிய குற்றவாளியான நக்‌சல் தளபதி டாக்டர் எனும் சொரென் கோடா காவல்துறையில் சரணடைந்ததையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.

தற்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இதுகுறித்து ஜமுய் மாவட்ட காவல்துறை எஸ்.பி சௌரியா சுமன் கூறுகையில், “நக்‌சல்கள் முற்றும் இல்லாத பகுதிகளில் வளர்ச்சி இருக்கும். ஜமுய் மாவட்டத்தின் பெண்கள் நல்ல வேலையைச் செய்துள்ளனர். காவல்துறை ஒரு பக்கம் இப்பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வர, மறுபக்கம் அரசாங்கம் பல திட்டங்களை இப்பகுதிகளுக்கு அளித்து வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: மும்பை துப்பாகிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details