தமிழ்நாடு

tamil nadu

ரூ. 35 கோடிக்கு மொத்த காங்கிரஸையும் எங்களால் வாங்க முடியும் - பாஜக!

By

Published : Jun 17, 2020, 7:11 PM IST

ஜெய்ப்பூர் : பாஜக நினைத்திருந்தால் காங்கிரஸ் கட்சி முழுவதையும் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்க முடியும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

Rajasthan BJP Chief
Rajasthan BJP Chief

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது, "ராஜஸ்தான் மாநிலத்தின் மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கட்சி மாற்றம் செய்ய பாஜக முயலவில்லை. எங்கள் கட்சிக்கு போட்டி எம்.எல்.ஏக்களை சேர்ப்பதற்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

தனது சொந்த எம்.எல்.ஏக்கள் மீது நம்பிக்கை இல்லாத காங்கிரஸ்தான் அவர்களை மறைத்து வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சியினர் ராஜஸ்தானின் புனிதத்தை கெடுத்துவிட்டனர். மேலும், தங்கள் சொந்த எம்.எல்.ஏக்களை விற்க அவர்களே முயன்றனர். நாங்கள் உண்மையில் எம்.எல்.ஏக்களை வாங்க விரும்பினால், காங்கிரஸ் கட்சி முழுவதையும் ரூ. 35 கோடிக்கு வாங்கியிருக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியின் கெஹ்லாட் தலைமையிலான அரசாங்கம் தனது சொந்த தவறான செயல்களால் வீழ்ச்சியடையும். காங்கிரஸ் அரசு என்று வீழ்ச்சியடையும் ? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நாங்கள் அதைக் கவிழ்க்க முயற்சிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அது அதன் சொந்த தவறான செயல்களால் வீழ்ச்சியடையும்" என்று அவர் கூறினார்.

கட்சி தாவ எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியது தொடர்பாக ராஜஸ்தான் அரசு தனது காவல்துறையின் ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) மூலம் விசாரணை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details