தமிழ்நாடு

tamil nadu

89 பேரின் பெயர்களை பல்வேறு சேவைகளுக்கு பயிற்சிப்பெற யூபிஎஸ்சி பரிந்துரை!

By

Published : Jan 5, 2021, 6:17 AM IST

டெல்லி : இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 89 பேரின் பெயர்களை பல்வேறு சேவைகளின் கீழ் பயிற்சிப்பெற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

89 பேரின் பெயர்களை பல்வேறு சேவைகளுக்கு பயிற்சிப்பெற யூபிஎஸ்சி பரிந்துரைத்தது!
89 பேரின் பெயர்களை பல்வேறு சேவைகளுக்கு பயிற்சிப்பெற யூபிஎஸ்சி பரிந்துரைத்தது!

இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூ.பிஎஸ்.சி.) சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஏ , பி பிரிவு பணிச் சேவைகளுக்கு மொத்தமுள்ள 927 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

அதில், தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியல் 2020 ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

தேர்வாணையத்தின் விதிகளின்படி, அந்தந்தப் பிரிவுகளின் கீழ் கடைசியாக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயருக்கு கீழே தகுதிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த இருப்புப் பட்டியலையும் பராமரித்து வரப்படுகிறது. அந்த வகையில், 2019 சிவில் சர்வீசஸ் தேர்வின் அடிப்படையில் மீதமுள்ள பதவிகளை நிரப்ப 73 நபர்களின் பெயரை ஆணையம் இன்று பரிந்துரைத்துள்ளது.

89 பேரின் பெயர்களை பல்வேறு சேவைகளுக்கு பயிற்சிப்பெற யூபிஎஸ்சி பரிந்துரைத்தது!

பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் கோரிக்கை ஏற்று, 89 பேர் பட்டியலை இட ஒதுக்கீட்டின்படி (73 பொதுப்பிரிவு, 14 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 1 பொருளாதார ஈ.டபிள்யூ.எஸ் (பொருளாதார ரீதியாக ஏழ்மையாக உள்ள பிரிவினர்), 1 பட்டியல் சாதியினர் ) வெளியிட்டுள்ளது.

927 காலியிடங்களுக்கு எதிராக ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பிற குழு ‘ஏ’ மற்றும் குழு ‘பி’ மத்திய சேவைகளுக்கு நியமனம் பெறுவதற்கான தகுதி அடிப்படையில் 829 வேட்பாளர்களை பரிந்துரைத்து 2019 சிவில் சர்வீசஸ் தேர்வின் முடிவு 2020 ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

89 நபர்களின் பெயர் பட்டியல் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான http // www.upsc.gov.in. காணலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :லாவேபோரா போலி என்கவுன்டர் : ”என் மகனை கொன்றது போல என்கவுன்டரில் என்னைக் கொன்றுவிடுங்கள்!” - ஆதரின் தந்தை வேதனை!

ABOUT THE AUTHOR

...view details