தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளை அடிமைகளாக்கும் வேளாண் மசோதா - மத்திய அரசை சாடிய பிரியங்கா

By

Published : Sep 25, 2020, 3:16 PM IST

டெல்லி: வேளாண் மசோதா விவசாயிகளை அடிமைகளாக்குவதற்கும், விவசாயிகள் தங்கள் வயல்களில் தொழிலாளர்களாக மாற்றும் செயலாகும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

farm
arm

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிராக பல மாநிலங்களில் அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் நாள் முழுவதும் போராடி வருவதால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்காக காவல் துறையினர் இரு மாநிலங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக முக்கிய நகரங்களில் பல கடைகளும் மூடப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " இது விவசாயிகளை அடிமைகளாக்குவதற்கும், விவசாயிகள் தங்கள் வயல்களில் தொழிலாளர்களாக மாற்றும் செயலாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கடுமையான சட்டத்திற்கு எதிராகப் போராடும் 62 கோடி விவசாயிகளுடன் தேசம் துணை நிற்க வேண்டும். நட்புறவு கொண்ட முதலாளிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் இதைச் செய்துள்ளார். ஏழைகள் குறித்த கவலை பிரதமருக்கு கிடையாது என குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details