தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகளை குறிவைக்கும் குடற்புழு: தடுப்பது எப்படி?

By

Published : Oct 28, 2020, 2:51 PM IST

குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் முக்கியப் பிரச்னையான குடற்புழு பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து நம்மிடம் விவரிக்கிறார் நியோனாட்டாலஜிஸ்ட் ஆலோசகர் டாக்டர் விஜயானந்த் ஜமல்பூரி.

soil
oil

சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று என்னும் ஒட்டுண்ணி குடல் புழு தொற்று என்பது முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சி, நலனில் இவை தீங்கு விளைவிக்கின்றன.

சத்தான உணவைப் பார்த்துப் பார்த்துக் கொடுத்தாலும் பிள்ளைகள் மெலிந்து, வெளிறி இருப்பார்கள். அதற்கு காரணம் பெரும்பாலும் வயிற்றில் இருக்கும் குடற்புழுதான். இவற்றைச் சாதாரணமாக நினைத்துவிடாமல் மருத்துவரைச் சரியான நேரத்தில் அணுகத் தவறினால், பிரச்னையின் வீரியம் அதிகரித்துவிடும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, 1-14 வயதுக்குள்பட்ட 241 மில்லியன் (24 கோடியே 10 லட்சம்) குழந்தைகள் இந்தியாவில் புழு தொற்று அபாயத்தில் உள்ளனர். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்காக ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் நியோனாட்டாலஜிஸ்ட் ஆலோசகர் டாக்டர் விஜயானந்த் ஜமல்பூரியை அணுகினோம்.

அவர் நம்மிடம் விவரித்ததாவது:

குடற்புழு எப்படி பரவுகிறது?

அசுத்தமான உணவு அல்லது அசுத்தமான கைகளை உபயோகித்து சாப்பிடுவதால்தான் மண்ணால் பரவும் ஹெல்மின்த் அல்லது ஒட்டுண்ணி புழுக்கள் பொதுவாகப் பரவுகின்றன. ரவுண்ட் வார்ம்கள், சவுக்கைப் புழுக்கள், கொக்கிப் புழுக்கள் என மூன்று வகையான புழுக்கள் உள்ளன. இவை பல வழிகளில் நமது உடலுக்குள் எளிதாகப் பரவுகின்றன.

குடற்புழு உடலில் செய்யும் மாற்றங்கள்

புழுக்கள் உடலில் நுழைந்தவுடன், முதலில் குடலுக்குச் சென்று ஊட்டச்சத்துக்களை உண்ணத் தொடங்குகின்றன. இதுமட்டுமின்றி உடலின் உறிஞ்சல் செயல்முறையை தடுக்கின்றன. மேலும், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒருவரின் உடல், அறிவாற்றல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். சில கடுமையான சூழ்நிலையில், குடலில் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம்.

குடற்புழுவை தடுப்பதன் மூலம் உடலில் ஊட்டச்சத்து சரியான அளவில் இருக்கும். பள்ளிக்கு குழந்தைகள் சுறுசுறுப்பாகச் செல்வார்கள். புழு தொற்று பரவல் சமூகத்தில் குறையும். வயிற்றில் பாதிப்புகள் ஏற்படாது.

குடற்புழு அறிகுறிகள்

ரத்த சோகை

சோம்பல் மற்றும் செயல்பாடு குறைவு

எரிச்சல்

வயிற்று வலி

வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

பசியின்மை

குடற்புழுவைத் தடுக்கும் முறை

சுகாதார கழிப்பறைகளைப் பயன்படுத்துதல்

வெளியில் மலம் கழித்தல் கூடாது.

கை கழுவுதல், குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகு

வெளியே சென்றால் காலணி அணிந்துகொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகளைப் பாதுகாப்பான-சுத்தமான நீரில் கழுவு வேண்டும்

உணவுகளை ஒழுங்காகச் சமைக்க வேண்டும்

குடற்புழு நோய் பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படக்கூடும். ஆனால், குழந்தைகள் மத்தியில்தான் அதிகளவில் காணப்படுகிறது. இது எளிதாகப் பரவும் தன்மையும் கொண்டது. உடலுக்குத் தேவையான வளர்ச்சியை பல ஆண்டுகளாகச் சாப்பிட்டு, நம்மை பலவீனமானவர்களாக மாற்றிவிடும். இந்த நோயினால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.

அதே சமயம், நீண்ட கால பிரச்னையாக உடலில் தங்குவதால் மருத்துவரை கட்டாயம் அணுகுவது நல்லது. மேலும், தேசிய குடற்புழு நீக்க தினம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதன் காரணமாக 14 மாநிலங்களில் குடற்புழு நோய் தாக்கம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details