தமிழ்நாடு

tamil nadu

ஜம்முவில் இந்தாண்டு மட்டும் 3186 விதிமீறல் தாக்குதல்கள்!

By

Published : Sep 15, 2020, 12:06 AM IST

டெல்லி: ஜம்மு பிராந்தியத்தில் இந்தாண்டு செப்டம்பர் 7ஆம் தேதிவரை மூன்றாயிரத்து 186 போர் நிறுத்த விதிமீறல் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் இந்தாண்டு மட்டும் 3186 விதிமீறல் தாக்குதல்கள்!
ஜம்முவில் இந்தாண்டு மட்டும் 3186 விதிமீறல் தாக்குதல்கள்!

போர் நிறுத்த மீறல்களை மீறி, ஜம்மு பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்தாண்டு ஆகஸ்ட் 31 வரை 242 எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோட்டில் பி.எஸ்.எஃப் பணியாளர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"போர் நிறுத்த மீறல்களுக்கு தகுந்த பதிலடி, தேவைக்கேற்ப, இந்திய ராணுவம் / பிஎஸ்எஃப் மேற்கொண்டுள்ளது" என்று அமைச்சர் மேலும் கூறினார். தவிர, போர்நிறுத்த மீறல்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் பாகிஸ்தான் அலுவலர்களிடம் ஹாட்லைன்கள், கொடி கூட்டங்கள், ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநரகம் பொது பேச்சுவார்த்தைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர சேனல்கள் ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details