தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கால் குடும்ப வன்முறை அதிகரிப்பு: மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர்

By

Published : Jun 8, 2020, 4:14 PM IST

டெல்லி: ஊரடங்கால் குடும்பங்களில் நிகழும் வன்முறை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் குடும்பங்களில் நிகழும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுப்பு தெரிவித்துள்ளார். டை டாக் என்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், "இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை தொடர்ந்து இயங்கிவருகிறது. வன்முறை தடுப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கிவருகிறது. மாநில வாரியாக, மாவட்ட வாரியாக உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பெயர், அடையாளம் குறிப்பிடாமல் என்னால் வெளியிட முடியும்.

வீட்டில் உள்ள 80 விழுக்காடு பெண்கள் வன்முறைக்கு உள்ளானார்கள் என அரசு சாரா அமைப்பில் இயங்கிவரும் ஒரு சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். பெண்களுக்கு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அவசர எண்களை தவிர்த்து 35 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக வாட்ஸ்ஆப்பில் பதிவு : ராஜஸ்தான் டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details