தமிழ்நாடு

tamil nadu

ராம ஜென்ம பூமி கோயிலா அல்லது புதிய ராமர் கோயிலா?

By

Published : Jul 30, 2020, 10:54 PM IST

புதிய கருவறை அமையவுள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளி பலகை வைக்கப்படும். ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்பட்ட இடத்தில் இந்த கருவறை அமைக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது. அனைத்து புனித நதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் புனித நீர் மற்றும் மண், பூமிபூஜை மற்றும் அஸ்திவாரத்தின் போது ஊற்றப்படும்.

ராமர் கோயில்
ராமர் கோயில்

அயோத்தியில் புதிதாக கட்டப்படவிருக்கும் ராமர் கோயில், ராம ஜென்ம பூமி கோயிலா அல்லது வெறுமனே புதிய ராமர் கோயில் என்று அழைக்கப்படுமா என்பதில் பொருத்தமான கேள்வி எழுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 6ஆம் தேதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மசூதியோடு, ராமர் கோயிலும் தரைமட்டமாக்கப்பட்டது.

அங்கிருந்த ராமரின் சிலை மீட்கப்பட்டு, அது அருகில் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் புதிய ராமர் கோயிலின் பூமி பூஜை மற்றும் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் தொடங்குகின்றன.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளியிலான ஐந்து கற்களை வைத்து ராமர் கோயில் பூஜையில் கலந்து கொள்வார். ஆரம்பத்தில், சுமார் 250 விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருந்தனர்.

ஆனால் இப்போது இந்தப் பட்டியல் 125 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில், எல்.கே. அத்வானி, எம்.எம். ஜோஷி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராம் ஜன்மபூமி போராட்டத்திற்கு தலைமை வகித்த மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

புதிய கருவறை அமையவுள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளி பலகை வைக்கப்படும். ராமரின் பிறப்பிடம் என்று நம்பப்பட்ட இடத்தில் இந்த கருவறை அமைக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது.

அனைத்து புனித நதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் புனித நீர் மற்றும் மண், பூமிபூஜை மற்றும் அஸ்திவாரத்தின் போது ஊற்றப்படும். புதிய ராமர் கோயில் வளாகம் நிச்சயமாக அற்புதமாக இருக்கும்.

சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இது உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும். முதலாவது கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் வளாகம், இரண்டாவது தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில்.

இந்த வளாகத்தில் சீதா, லட்சுமணன், பரதன், அனுமன் ஆகியோரின் கோயில்கள் சூழ பிரதான கோயிலாக ராமர் கோயில் இருக்கும். புதிய ராம் கோயிலின் மாதிரி நாகராஜ் பாணி கட்டடக்கலையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இது 76,000-84,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும். இந்த வடிவமைப்பை 1983ஆம் ஆண்டில் சந்திரகாந்த் சோம்புரா தயாரித்தார்.

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை சோம்புரா குடும்பத்தினர் வடிவமைத்திருந்தனர், அதனால் மாதிரியைத் தயாரிப்பது மற்றும் புதிய கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்களை செதுக்குவது போன்ற பணிகளை ஒப்படைத்தனர்.

ஆரம்ப வடிவமைப்பில் 141 அடி உயரத்தில் இருந்தது, இது தற்போது 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலில் சோம்புரா 2 தளங்களை விரும்பினார், ஆனால் இப்போது 3 தளங்கள் கொண்ட வடிவமைப்பை கொண்டிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் ஒரு பெரிய குவிமாடமும் நான்கு சிறிய குவிமாடங்களும் இருக்கும். இந்த கோயில் 300 அடி நீளமும் 280 அடி அகலமும் கொண்ட ஐந்து பிராகாரங்களைக் கொண்டிருக்கும். கூர் மண்டபம் - மூடிய பிரகாரத்தில் கருவறை உள்ளது.

இந்த பிரகாரம் முக்கியமாக தெய்வத்தின் தரிசனத்திற்கு பயன்படுத்தப்படும். இது தவிர பிரார்த்தனை மண்டபம், கீர்த்தனை மண்டபம், நிருத்யா மண்டபம் மற்றும் ரங் மண்டபம் ஆகியவை வருகை தரும் பக்த கூட்டங்களுக்கு இடமளிக்கும்.

எந்த நேரத்திலும் இந்த மண்டபங்கள் 5,000-8,000 வரையிலான பக்தர் கூட்டங்களுக்கு சேவை செய்ய முடியும். இந்த கோயில் முக்கியமாக ராஜஸ்தானின் பன்சிபாண்ட் மணற்கற்களால் கட்டப்படும். கோவில் கட்ட குறைந்தபட்சம் 1.75 லட்சம் கன அடி மணற்கல் தேவைப்படும்.

இந்தக் கோவிலில் 212 செதுக்கப்பட்ட தூண்கள் இருக்கும், அவற்றில் 100க்கும் மேற்பட்டவை கடந்த 30 ஆண்டுகளாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முழுமையான அனைத்து உபகரணங்கள் கொண்ட பட்டறையில் ஏற்கனவே செதுக்கப்பட்டுள்ளன.

இந்த தூண்களை செதுக்கும் பணி அயோத்தி பட்டறையில் நடந்து வருகிறது. இந்த தூண்கள் இரண்டு நிலைகளில் இணைக்கப்படும், மேலும் இந்து தெய்வங்களின் சிற்பங்களும் அலங்கார வடிவமைப்புகளும் இருக்கும்.

இப்போது கட்டுமானப் பொறுப்பில் இருக்கும் ஆஷிஷ் சோம்புரா ", பிரதான நுழைவாயில் நிற்கும் எவரும் அந்த தூரத்திலிருந்து கூட தெய்வத்தைக் காண முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது." என்று கூறுகிறார், சுமார் மூன்றரை ஆண்டுகளில் பகவான் ராம் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று சோம்புரர்கள் நம்புகிறார்கள்.

ராம் லல்லா நிச்சயமாக மகிழ்ச்சியாய் இருப்பார். பூமி பூஜை நாளில் அவரது தெய்வம் 9 மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட உடையை அணிவார். மேலும் நவகிரகத்தை குறிக்கும் இந்த உடையை தையல்காரர் பகவத் பஹாரி தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பாப்டே உயிருக்கு ஆபத்து' Z ப்ளஸ் பாதுகாப்பில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி!

ABOUT THE AUTHOR

...view details