தமிழ்நாடு

tamil nadu

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - குடியரசுத் தலைவர்

By

Published : May 7, 2020, 12:46 PM IST

டெல்லி: விசாகப்பட்டினத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து விதமான முயற்சிகளும் செய்யப்பட்டுவருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

President
President

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவந்த தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஸ்டைரீன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஸ்டைரீன் வாயுக் கசிவு காரணமாக அப்பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்குக் கண், தோல், மூக்கு ஆகியவற்றில் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "விசாகப்பட்டினம் அருகேயுள்ள ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து பலர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது எனக்கு வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும், அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நிர்வாகம் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details