தமிழ்நாடு

tamil nadu

பறவைக் காய்ச்சல் அச்சம்...! பாதி விலையில் கிடைக்கும் சிக்கன், முட்டை!

By

Published : Jan 10, 2021, 5:19 PM IST

டெல்லி: பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக, சிக்கன் மற்றும் முட்டை விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டெல்லி
டெல்லி

கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. பறவைக்காய்ச்சலால் இதுவரை நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கோழிகள் கொண்டு செல்வதற்கு தடை விதித்ததால், அந்த தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது ஹரியானாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வேறு இடங்களிலிருந்து குடியேறிய பறவைகள் அல்லது காட்டு பறவைகளாக உள்ளன.

இந்தாண்டு தொடக்கத்தில், பறவைக் காய்ச்சல் குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் கோழிகள் விற்பனை 70 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைந்துள்ளது என கோழி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய இந்திய கோழி கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் காத்ரி, "கடந்த மூன்று, நான்கு நாட்களில் கோழி விற்பனை 70 முதல் 80 விழுக்காடு வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோழி விற்பனை விலை 50 விழுக்காடு குறைந்துள்ளது. முட்டையின் விலையும் 15 முதல் 20 வரை குறைந்துள்ளது. ஹரியானாவில் பறவை காய்சசல் கண்டறியப்பட்ட இரண்டு பண்ணைகளிலும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் பாதிப்பு கிடையாது. முட்டைக்காக வளர்க்கப்பட்ட கோழிகளில் தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details