தமிழ்நாடு

tamil nadu

நுகர்வோரின் திருப்தி முக்கியம்: மின்சார அமைச்சகத்தை வலியுறுத்திய மோடி!

By

Published : May 28, 2020, 11:43 AM IST

டெல்லி: மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களை மதிப்பீடு செய்த பிரதமர் மோடி, நுகர்வோர் திருப்தியை முன்னுரிமையாக்கி அதனை மேம்படுத்துவதற்கு மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட தீர்வை எட்டவேண்டும் என வலியுறுத்தினார்.

Narendra Modi  power sector  energy Ministries  PM Modi  PM reviews power sector  Electricity (Amendment) Bill 2020  நுகர்வோர் திருப்தி  பிரதமர் மோடி  மோடி  மின்சார திருத்த மசோதா  சூரிய ஒளி மின்சாரம்
நுகர்வோரின் திருப்தி முக்கியம்: மின்சார அமைச்சகத்தை வலியுறுத்திய மோடி

மின்சாரத் துறையின் நிதி பற்றாக்குறையை சரிசெய்து, நுகர்வோர் திருப்தியை முதன்மையாக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் பணியை மதிப்பாய்வு செய்த மோடி, மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் மின்சார விநியோகம் குறித்த குறைகளை சுட்டிக்காட்டினார். இந்த மதிப்பாய்வின் போது, மின்சாரத் துறையிலுள்ள சிக்கல்களை கலைய திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணக் கொள்கை, மின்சார திருத்த மசோதா(2020) குறித்தும் விவாதித்தார்.

இந்த மதிப்பாய்வு குறித்து மின்சார துறை வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து குறைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே தீர்வை தேடுவதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாநிலமும் ஒரு குறிப்பிட்ட தீர்வை முன்வைத்து செயல்திறனை அதிகரிக்கவேண்டும். நுகர்வோரின் திருப்தியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் மின்சாரத் துறையில் நிதி நிலைத்தன்மையுடன் இருக்கும்.

மின்சார விநியோகம் செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகளை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநில அரசுகள் வெளியிடவேண்டும். அதன் மூலம் போட்டி நிறுவனங்கள் எவ்வளவு தொகைக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கின்றன என்பதை மக்கள் ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடியும். கூடுதலாக மின்சாரத் துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

விவசாயத் துறையில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் தண்ணீர் குழாய்கள், பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். மொட்டை மாடி சூரியஒளி திட்டத்தை ஒவ்வொரு மாநில அரசும், அதன் தலை நகரத்திலோ அல்லது புகழ்பெற்ற சுற்றுலாத்தளத்திலே செயல்படுத்தவேண்டும்" இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் 'மோடி மக்கள் உணவகம்' திறப்பு

ABOUT THE AUTHOR

...view details