தமிழ்நாடு

tamil nadu

தொடரும் பாகிஸ்தானின் அட்டூழியம்!

By

Published : Nov 7, 2020, 4:45 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், கிராம மக்கள் பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.

pakistani troops
pakistani troops

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், கத்துவா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (சனிக்கிழமை) திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஷாபூர், கிர்னி, கஸ்பா பகுதிகளின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அப்போது சிறிய ரக துப்பாக்கி, மோட்டார் ஷெல் ரக குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்நிலையில், இன்று (நவ.7) காலை 2.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. விடிய விடிய நடைபெற்ற தாக்குதல் காலை 5 மணி வரை நீடித்தது.

இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுத்தது.

ABOUT THE AUTHOR

...view details