தமிழ்நாடு

tamil nadu

தொடர்ந்து எல்லை மீறும் பாகிஸ்தான் - பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு

By

Published : Jun 12, 2020, 2:33 AM IST

ஸ்ரீநகர்: போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

One Indian Army jawan killed in ceasefire violation
One Indian Army jawan killed in ceasefire violation

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் அத்துமீறி இந்திய படைகள் மீது தாக்கல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அதற்கு இந்திய படைகளும் அவ்வப்போது பதிலடி கொடுத்துவருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி, பூஞ்ச், கத்துவா மாவட்டங்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் புதன்கிழமை இரவு, சிறிய மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். மேலும், எல்லையிலிருந்த இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், குர்ச்சரன் சிங் என்ற வீரர் படுகாயமடைந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் காயங்கள் மோசமாக இருந்ததால் சிகிச்சை பலனிற்றி அவர் உயிரிழந்தார்.புதன்கிழமை இரவு 10 முதல் 11 மணிக்குள் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் மாணவர்களுக்கு பிணை...!

ABOUT THE AUTHOR

...view details