தமிழ்நாடு

tamil nadu

கரோனா வந்த பிரபல மருத்துவருக்கு சிகிச்சை: அலைக்கழிப்பால் உயிரிழப்பு!

By

Published : Jun 3, 2020, 4:43 PM IST

மும்பை: மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற மருத்துவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டபின், உரிய சிகிச்சை அளிக்கப்படாமல், அலைக் கழிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சை அலைக்கழிப்பால் மருத்துவர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சை அலைக்கழிப்பால் மருத்துவர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் ஜிஎஸ்எம்பி மருத்துவனையில் பிரபலமான இ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கியவர், சித்தர்ராஜன் பாவே. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்று நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ரஹேஜா மருத்துவனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு படுக்கை கிடைக்காததால், சுமார் பத்து மணி நேரம் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநிலத்தில் மற்றொரு புறம், கிட்டத்தட்ட 462 மருத்துவர்கள், 200 செவிலியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கரோனா எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பு 1,319ஆக உள்ளது.

இதையும் படிங்க:மும்பையில் இருந்து மதுரை வந்த 73 பேருக்குப் பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details