தமிழ்நாடு

tamil nadu

கேரளா அரசு மருத்துவனையில் உடற்கூறு ஆய்வு நிறுத்திவைப்பு?

By

Published : Jul 13, 2019, 6:32 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால், உடற்கூறு ஆய்வு செய்வது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Trivandrum medical college

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருந்துவனை கடந்த 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 68 ஆண்டுகளாக மக்களுக்கு நன்முறையில் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த இரண்டு நாட்களாக இறந்த பிரேதத்திற்கு உடற்கூறு ஆய்வு நடத்தாமல், உடல்கள் திருப்பி அனுப்பபடுகின்றன. மருத்துவமனையில் போதிய தண்ணீர் இல்லாததால் தற்காலிகமாக உடற்கூறு ஆய்வை நிறுத்தியுள்ளதாக மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறந்த உடல்களை கொண்டுவரும் உறவினருக்கு இந்த காரணம் தெரிவிக்கப்பட்டு, உடல்களை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

எவ்வித முறையான அறிவிப்புகளுமின்றி அரசு மருத்துவமனையில் இதை செய்துவருவதால், அலைச்சல் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று உடற்கூற் ஆய்விற்காக வந்த ஐந்து பிரேதங்களுக்கு ஆய்வு நடத்தாமல் திருப்பி அனுப்பபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details