தமிழ்நாடு

tamil nadu

ஏழு மாநில முதலமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் பிரதமர் மோடி!

By

Published : Sep 22, 2020, 3:25 PM IST

டெல்லி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஏழு மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை(செப்.23) ஆலோசிக்கவுள்ளார்.

Modi
Modi

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், கரோனா பரவல் தீவிரமாகவுள்ள ஏழு மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை(செப்.23) ஆலோசனை நடத்தவுள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரோனா பரவல் அதிமாகவுள்ள மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

நாட்டில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளில் 63 விழுக்காட்டினர் இந்த ஏழு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதுதவிர ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டதில் 65.5 விழுக்காட்டினர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதேபோல கரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 77 விழுக்காடு இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் உயிரிழிப்பு விகிதம் இரண்டு விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அவமதித்த எம்.பி.க்கள்... ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க மாநிலங்களவை துணைத்தலைவர் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details