தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் மின் கட்டண சேவை: புதுவை அமைச்சர் தொடங்கி வைத்தார்

By

Published : Jun 27, 2019, 7:15 PM IST

புதுச்சேரி: மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் சேவையை மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரியில், மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அறையில், மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் சேவையை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், எற்கனவே ஒரு வங்கியுடன் மட்டும் இணைந்து மின் துறை ஆன்லைன் கட்டண சேவையை செய்து வந்தது. தற்போது புதுச்சேரி மின்துறை, 55 வங்கிகளுடன் இணைந்து ஆன்லைன் கட்டண சேவையை தொடங்கியுள்ளது. மேலும், புதுச்சேரியில் உள்ள வீடு, அரசு அலுவலகங்களுக்கு சோலார் திட்டத்தை தொடங்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


.

Intro:புதுச்சேரியில் 1353 கோடி ரூபாய் அளவிற்கு இந்த ஆண்டு மின் கட்டணம் வசூலாகியுள்ளதாக மின் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்


Body: புதுச்சேரி மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அறையில் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் சேவையை தொடங்கி வைத்தார் அப்போது பேசிய அவர்
ஏற்கனவே ஒரு வங்கியுடன் மட்டும் இணைந்து மின் துறை தனது ஆன்லைன் கட்டண சேவையை செய்து வந்தது தற்போது புதுச்சேரி மின்துறை ஆனது 55 வங்கிகளுடன் இணைந்து ஆன்லைன் கட்டண சேவையை தொடங்கியுள்ளது இதன் மூலம் மக்கள் சிரமம் குறைக்கப்பட்டு உள்ளது என்றார்

கடந்த காலங்களில் ஆயிரம் கோடி அளவில் மட்டுமே புதுச்சேரியில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது தற்போது மின் துறையில் தீவிர முயற்சியில் 1353 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் வசூல் ஆகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் மேலும் அவர் பேசுகையில் அரசு அலுவலகங்களில் இருந்து 388 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி இருப்பதாகவும் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் மூலம் மின்துறைக்கு வரவேண்டிய பாக்கி 81கோடி ரூபாய் ஆகும் என்றார் பெரிய தொழிற்சாலைகளில் இருந்து பல லட்ச ரூபாய் மின் கட்டண பாக்கியை வசூல் செய்யாத மின் துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார் விரைவில் புதுச்சேரி வீடுகளுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சோலார் திட்டத்தை தொடங்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்


Conclusion:புதுச்சேரியில் 1353 கோடி ரூபாய் அளவிற்கு இந்த ஆண்டு மின் கட்டணம் வசூலாகியுள்ளதாக மின் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்

ABOUT THE AUTHOR

...view details