தமிழ்நாடு

tamil nadu

வங்கி திவால் திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

By

Published : Mar 6, 2020, 11:37 AM IST

டெல்லி: வங்கி திவால் திருத்தச் சட்ட மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல்செய்கிறார்.

Lok Sabha  Nirmala Sitharaman  Budget Session  Finance Minister  Key Bills  வங்கி திவால் திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல்  வங்கி திவால் சட்டம், 2019 வங்கி திருத்தச் சட்ட மசோதா, மக்களவை, நிர்மலா சீதாராமன்  insolvency Bill  Sitharaman to move Insolvency and Bankruptcy Code (Second Amendment) Bill, 2019
Sitharaman to move Insolvency and Bankruptcy Code (Second Amendment) Bill, 2019

வங்கி திவால் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கலாகிறது. இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்துகிறார். இந்த மசோதா குறித்த சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், “2016ஆம் ஆண்டு வங்கி திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள வங்கி திவால் சட்ட மசோதா, 2016இல் உள்ள சில தெளிவற்ற தன்மைகளை நீக்கி, குறியீட்டை சீராக செயல்படுத்துகிறது.

மேலும் நொடித்துத் தீர்க்கும் செயல்முறையை எளிதாக்குவது மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதுமட்டுமின்றி நிதியைப் பாதுகாக்கவும், நிதி நெருக்கடியில் உள்ள துறைகளில் முதலீட்டை அதிகரிக்கவும் முயல்கின்றன.

இந்தத் திருத்தங்கள் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஏலதாரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் நாட்டின் நிதி அமைப்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details