தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக மாநிலங்களவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனு தாக்கல்!

By

Published : Jun 8, 2020, 7:11 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Mallikarjun Kharge  Rajya Sabha polls  Karnataka Rajya Sabha polls  Karnataka Assembly  கர்நாடக மாநிலங்களவை தேர்தல்  காங்கிரஸ்  பாஜக  ஜே.டி.எஸ்  மதசார்பற்ற ஜனதா தளம்  மல்லிகார்ஜூன கார்கே  வேட்புமனு தாக்கல்  மாநிலங்களவை தேர்தல்
Mallikarjun Kharge Rajya Sabha polls Karnataka Rajya Sabha polls Karnataka Assembly கர்நாடக மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ் பாஜக ஜே.டி.எஸ் மதசார்பற்ற ஜனதா தளம் மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனு தாக்கல் மாநிலங்களவை தேர்தல்

கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வான காங்கிரஸின் ராஜீவ் கவுடா, பி.கே. ஹரிபிரசாத், பா.ஜனதாவின் பிரபாகர் கோர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் (ஜே.டி.எஸ்) குபேந்திரா ரெட்டி ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 25ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது.

இதையடுத்து காலியாகவுள்ள நான்கு பதவிகளுக்கும் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (77) இன்று (திங்கள்கிழமை) தனது வேட்புமனுவை, கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் முன்னிலையில் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனு தாக்கல் செய்த போது எடுத்தபடம்.

மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கட்சி மேலிடம் கடந்த 5ஆம் தேதியே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 68 ஆக உள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 44 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆகையால் அம்மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் கார்கே மாநிலங்களவைக்கு தேர்வாவது உறுதியாகியுள்ளது. மேலும், 117 உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட பா.ஜனதாவுக்கு இரு மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.

நான்காவது உறுப்பினரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. கார்கேவின் மகன் பிரியங் கார்கே சித்தாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இவர் ஜே.டி.எஸ். காங்கிரஸ் கூட்டணி சில காலம் ஆட்சியிலிருந்த போது அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் கை கோர்க்கும் பங்காளிகள்? நகம் கடிக்கும் பாஜக!

ABOUT THE AUTHOR

...view details