தமிழ்நாடு

tamil nadu

இனிமேல்தான் கரோனா ஆட்டம் அதிகரிக்கப்போகிறது - ஐ.பி.ஹெச்.ஏ.

By

Published : Sep 1, 2020, 2:49 PM IST

டெல்லி : உலகளாவிய தினசரி கோவிட்-19 பாதிப்பில் 30 விழுக்காடும், இறப்பு விகிதத்தில் 20 விழுக்காடும் கொண்டிருக்கும் இந்தியா வரும் நாட்களில் உச்சத்தை தொடும் என இந்திய பொது சுகாதாரச் சங்க (ஐ.பி.ஹெச்.ஏ.) வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இனிமேல் தான் கரோனா ஆட்டம் அதிகரிக்கப்போகிறது - ஐ.பி.ஹெச்.ஏ
இனிமேல் தான் கரோனா ஆட்டம் அதிகரிக்கப்போகிறது - ஐ.பி.ஹெச்.ஏ

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் கரோனா தொற்றுநோய் குறித்த ஆய்வுசெய்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க இந்திய பொது சுகாதாரச் சங்கம், தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்துக்கான இந்தியச் சங்கம், இந்திய கொள்ளை நோயியல் வல்லுநர் சங்கம் ஆகிய இணைந்து பணிக்குழு ஒன்றை அமைத்தது.

அந்த பணிக்குழு இதுவரை இரண்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ள நிலையில் இன்று கோவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான பொது சுகாதார அணுகுமுறை தொடர்பான மூன்றாவது கூட்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், "இந்திய அளவில் கரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அதன் பரவல் தாக்கம் நாடு தழுவிய உச்சத்தை இன்னும் சில நாள்களில் அடையலாம் என்பது உறுதியாக தெரிகிறது.

ஆசிய கண்டத்தில் அதிக அளவு பாதிப்பைக் கொண்ட நாடாக இந்திய இருக்கிறது. பெருகிய வரும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நகரங்கள், கிராமப்புறங்கள் என பல மட்டங்களில் பதிவாகி உள்ளன.

கோவிட்-19 பரவல் சமூக மயமாகிவிட்டது என்பதை குறிக்கும் வகையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவி உள்ளதாக செரோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சோதனை, சுவடு, சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் செரோ-கண்காணிப்பு அறிக்கைகள் இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கின்றன.

சார்ஸ் - கோவி-2 மொத்த மதிப்பிடப்பட்ட பாதிப்புள்ளுக்குள்ளானவர்கள் இடையே இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட இரண்டு மாதங்களில் தினசரி புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 9,472 (ஜூன் 5) முதல் 61,749 (ஆகஸ்ட் 23) வரை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 10 லட்சம் மக்களில் 2,251 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் தொற்றுநோயிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல, இறப்பு விகிதமும் (சி.சி.எஃப்.ஆர்) படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது நான்காம் கட்ட தளர்வளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 நோயாளிகளின் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

கரோனா சிறப்பு சிகிச்சைகளில் முழு சுகாதார அமைப்பையும் கவனம் செலுத்திவருவதன் காரணமாக பிற நோயாளிகள், தேசிய சுகாதார திட்டங்கள் மீதான கவனம் குறைந்துள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details