தமிழ்நாடு

tamil nadu

'வெவ்ஸ் டூ வாட்டர்' பரிசை வென்ற மெட்ராஸ் ஆராய்ச்சியாளரின் சர்வதேச குழு!

By

Published : Oct 5, 2020, 8:07 PM IST

சென்னை: அமெரிக்க எரிசக்தி துறை நடத்திய வெவ்ஸ் டூ வாட்டர் போட்டியில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற சர்வதேச குழுவினர் வெற்றியடைந்தது பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

aves
avesw

அமெரிக்க எரிசக்தி துறை ஏற்பாடு செய்த வெவ்ஸ் டூ வாட்டர் போட்டியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய சர்வதேச குழுவினர் முதல் இரண்டு கட்டங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இயற்கை பேரிடர்கள் ஏற்படும் பட்சத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு, கடல் அலைகளைப் பயன்படுத்தி அதன் ஆற்றலின் மூலம் உப்புத் தண்ணீரை குடிநீராக மாற்றும் திட்டம். இப்போட்டியில் கலந்துகொண்ட 'நலு இ வை’ அணியில் இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அமெரிக்க எரிசக்தி நீர்வள தொழில்நுட்பத் துறை அலுவலகம், அலை மூலம் இயங்கும் உப்புநீக்கம் முறைகளை உருவாக்கும் யோசனைகளைச் சமர்ப்பிக்க புதுமையாளர்களுக்கு சவால்விட ‘வெவ்ஸ் டூ வாட்டர்’ போட்டியை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட நிலையில், அதில் 17 அணிகள் முதல் இரண்டு கட்டங்களை வென்றன. அதில் ஒன்றான நலு இ வை அணியில் ஐ.ஐ.டி மெட்ராஸ், ஹொனலுலுவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகம், யு.எஸ். மற்றும் ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் இருந்தனர். இந்த வெற்றிக்கான பரிசுகளும் அவர்களுக்கு அமெரிக்க எரிசக்தி துறை சார்பாக வழங்கப்பட்டது.

இந்த வெவ்ஸ் டூ வாட்டர் போட்டி 5 கட்டங்களாக நடைபெற்றன. இதில் வரும் பரிசுத்தொகையை பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து பேசிய ஐ.ஐ.டி. மெட்ராஸின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் அபிஜித் சவுதுரி, 'நலு இ வை' பணிபுரியும் தொழில்நுட்பத்தை எடுத்துரைத்து, “உலகளாவிய நன்னீர் பற்றாக்குறையின் சிக்கலைத் தீர்க்க, உப்புநீக்கம் அவசியமாக தேவைப்படுகிறது.

இருப்பினும், தற்போது கிடைக்கக்கூடிய உப்புநீக்கம் தொழில்நுட்பங்களுக்கு கடல் நீர் சுத்திகரிப்புக்கு அதிக அளவு வெப்ப ஆற்றல் அல்லது உயர்தர மின்சாரம் தேவைப்படுகிறது, இது அதிக விலை மற்றும் ஆற்றல் மிகுந்ததாகும்.

எனவே, நன்னீர் விநியோகங்களுக்கு சூரிய, காற்று, அலை மற்றும் அலை ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைப் பயன்படுத்துவது மூலம் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடன் கூடிய சாத்தியமான நிலையை உருவாக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details