தமிழ்நாடு

tamil nadu

தன்பாலின உறவில் ஈடுபட்ட மனைவி - அவமானத்தில் கணவர் தற்கொலை!

By

Published : Nov 8, 2019, 6:39 PM IST

அமராவதி: மனைவி தன்பாலின உறவில் ஈடுபட்டதை அறிந்த கணவர், இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband

ஆந்திர மாநிலம், பிரகாஷம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் நகரைச் சேர்ந்தவர் ஏடுகொண்டலா. இவரது மனைவி சுமலதா.

இல்லத்தரசியான சுமலதா ஆண்களைப் போல் உடையணிந்து கொண்டு, வீட்டருகே வசிக்கும் ஏராளமான பெண்களுடன் தன்பாலின உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆன்லைனில் செக்ஸ் பொம்மைகள் உள்ளிட்டவற்றை வாங்கிப் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், தன்பாலின உறவில் ஈடுபட தன்னை வற்புறுத்தியதாக சுமலதா மீது இளம்பெண் ஒருவர், காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில், சுமலதா வீட்டிற்கு வந்த காவல் துறையினர், அவரின் கணவர் ஏடுகொண்டலாவுடன் சேர்ந்து வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது, சுமலதாவின் உடைமைகளில் செக்ஸ் பொம்மைகள் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டு, அவரது கணவர் ஏடுகொண்டலா அதிர்ச்சியடைந்தார்.

இதில் அவமானமடைந்த ஏடுகொண்டலா இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். ரத்தவெள்ளத்தில் மிதந்த ஏடுகொண்டலாவை காவல் துறையினர் ஓங்கோல் ரிம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி ஏடுகொண்டலா உயிரிழந்தார்.

இதனிடையே, சுமலதாவைக் கைது செய்துள்ள காவல் துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி தன்பாலின உறவில் ஈடுபட்டதை அறிந்து, கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க: ஆளுமைமிக்க தலைவராக மாறுவாரா ரஜினி?

ABOUT THE AUTHOR

...view details