தமிழ்நாடு

tamil nadu

'உணவு தானியத்தை கூடுதலாக கேட்டுப் பெறுக!' - முதலமைச்சரின் கடிதம் மத்திய அரசிடம் வழங்கல்

By

Published : Sep 4, 2019, 8:39 AM IST

Updated : Sep 4, 2019, 11:32 AM IST

புதுடில்லி : உணவு தானியம் போன்றவைகளை  மத்திய அரசிடமிருந்து கூடுதலாக பெற்றுத்தருமாறு முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒன்றை அமைச்சர் காமராஜ் மத்திய அரசிடம் வழங்கினார்.

மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு அரசின் உணவு, உணவுப்  பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.ஆர்.காமராஜும்

தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லி நார்த் பிளாக்கில் அமைந்துள்ள நிதி அமைச்சக அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதம்

இந்தச் சந்திப்பின்போது மண்ணெண்ணெய், உணவு தானியம் போன்றவைகளை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு கூடுதலாக பெற்றுத்தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.

உணவு தானியம் கூடுதல் விவகாரம் குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம்!

இச்சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சுதாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Intro:Body:

Food Supply minister kamaraj 


Conclusion:
Last Updated :Sep 4, 2019, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details